பிளாஸ்டிக் கவரில் எச்சில் துப்பி வீடுகளுக்குள் தூக்கி எறிந்த மர்ம பெண் யார்? பரபரப்பு தகவல்

திங்கள், 13 ஏப்ரல் 2020 (19:35 IST)
பிளாஸ்டிக் கவரில் எச்சில் துப்பி வீடுகளுக்குள் தூக்கி எறிந்த மர்ம பெண்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மர்ம பெண் ஒருவர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பிளாஸ்டிக் கவரில் எச்சி துப்பி வீடுகளுக்குள் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வல்லப்வாடி என்ற பகுதியில் ஒரு மர்மப் பெண் அங்குள்ள வீடுகளில் வரிசையாக பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி அதை தூக்கி எறிந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது இதனையடுத்து அந்த பகுதியினர் பெரும் பதட்டம் அடைந்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர் 
 
காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்தனர். அதுமட்டுமின்றி சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்
 
கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில் ஒரு சிலர் இதுபோல் வேண்டுமென்றே கொரோனா வைரசை பரப்பும் செயலில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்