அம்பானி வீட்டு வாசலில் பயங்கர வெடிபொருள் நிரம்பிய கார்: அண்டிலியாவில் பரபரப்பு!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:53 IST)
முகேஷ் அம்பானி வீட்டின் அருகே பயங்கர வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்த கார் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
உலகின் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் ‘அண்டிலியா’ என பெயரிடப்பட்டுள்ள சொகுசு பங்களாவில் இருந்து வருகிறார். இந்த பங்களாவிற்கு வெளியே சொகுசு வாகனம் ஒன்று நின்றுக்கொண்டிருந்துள்ளது. 
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மும்பை போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், மர்ம வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வெடிகுண்டு செயல் இழக்க செய்யப்பட்டு அந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்