முதலிடம் பறிபோனது ...தொடர்ந்து சறுக்கலை சந்திக்கும் முகேஷ் அம்பானி !

வியாழன், 31 டிசம்பர் 2020 (21:23 IST)
பணக்காரராக முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானி, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4 வது இடத்திலிருந்து 11 வது இடத்திற்கு பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் தற்போது ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர என்ற முதலிடத்தையும் இழந்துள்ளார்.
 

பிரபல நிறுவனமான புளூம்பெர்க் கடந்த வெளியிட்டுள்ள பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர், அம்பானியின் சொத்து மதிப்பு, ரூ.6 லட்சத்து 62

மேலும், 10 வது இடத்தில் லாரி எலிசன்(ஆரக்கிள்), 9 வது இடத்தில் கூகுள் நிறுவனர் செர்ஜே பிரின் ஆகியொர் அடுத்தது இடம்பிடித்துள்ளனர்.

வழக்கம் போல் அமேசான் ஜெப் பெகாஸ் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் ஆசியாவில் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஜாக்மா ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சீனா நாட்டைச் சேர்ந்த தொழிலபதிபர் ஜாங் ஷான்ஷன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே ஆசியாவில் மிகப்பெரும் பணக்காரராக இருந்தவர் ஜாக்மா, அவரைப் பின்னுக்குத்தள்ளி இந்த ஆண்டு முகேஷ் அம்மானி இந்த இடத்தைப் பிடித்தார். தற்போது சீனாவைச் சேர்ந்த ஜாங் ஷான்ஷன் இவ்விடத்தைப் பிடித்துள்ளார்.

ஜாங் ஷான்ஷன் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும், நோங்பூ ஸ்பிரிங் கோ தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கும்  நிறுவனத்தையும் வாங்கினார். இவற்றின் பங்குகளும் அவர் ஏற்கனவே நிர்வகித்து வரும் நிறுவனங்களின் பங்குகளும்  உயர்ந்ததால் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்