சூரத்தில் மோடி முகமூடி அணிந்து நடனம்! – வைரலான வீடியோ!

திங்கள், 7 அக்டோபர் 2019 (15:47 IST)
சூரத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற கர்பா நடனத்தில் பெண்கள் பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்து நடனமாடியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நவராத்திரி விழாவில் வட மாநிலங்களில் தாண்டியா ஆடுவது வழக்கம். சூரத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற நடன நிகழ்ச்சியின்போது பெண்கள் அனைவரும் மோடி உருவ முகமூடிகளை அணிந்து கொண்டு ஆடினர். மேலும் பல குழந்தைகளும், பெண்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களும் கூட மோடி முகமூடி அணிந்து வந்தனர்.

இந்த வினோதமான முகமூடி நவராத்திரி விழா சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

#WATCH Gujarat: People play garba wearing masks of PM Narendra Modi, in Surat. #Navratri (04.10.2019) pic.twitter.com/iQbgaMX5IE

— ANI (@ANI) October 5, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்