போலீஸை மோதி இழுந்து சென்ற பைக்… வைரல் வீடியோ

Arun Prasath

ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (17:20 IST)
சாலையை கடக்க முயன்ற போலீஸை, வேகமாக வந்த மோட்டார் பைக் ஒன்று மோதி இழுத்து சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சாலையின் குறுக்கே போலீஸார் இரண்டு பேர் கடக்க முயல்கின்றனர். சாலையின் பாதி தூரம் வரை வந்தபோது. அந்த பக்கம் வேகமாக ஒரு மோட்டார் பைக்கில் வந்த நபர், போலீஸ் ஒருவரின் மேல் மோதினார். இதில் போலீஸார் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். மேலும் பைக்கில் வந்த நபரும் கீழே விழுந்தார்.

அந்த ரோட்டில் பேரிகார்டு இருந்தும்கூட அவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சம்பவம் எந்த பகுதியில் நடந்தது என்ற விவரம் இல்லை. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கண்ணுமண்ணு தெரியாமல் வர்றானுக pic.twitter.com/dWEHk3DGgN

— ஆதிரன் (@Aathiraj8585) October 5, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்