ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து – மாநில அரசு அதிரடி!

சனி, 21 நவம்பர் 2020 (10:45 IST)
ஒடிசா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயம் என சொல்லப்பட்டாலும் அதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது இல்லை. இதை நிறைவேற்ற மாநில அரசுகளும் போக்குவரத்துக் காவல்துறையும் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, ஒடிசாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்