பாதாளம் நோக்கி பாயும் பங்குசந்தை புள்ளிகள்?! – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:23 IST)
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்து வருகின்றது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அன்றாட பொருட்களின் விலையும் உயர்வை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வார இறுதியான இன்று மும்பை பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளன. பங்குசந்தை தொடக்கிய சில மணி நேரங்களில் 822 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் புள்ளிகள் 50,217 ஆக உள்ளது. நிப்டி புள்ளிகள் 225 சரிந்து 14,871 ஆக உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்