ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (11:00 IST)
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   
 

இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டுவருகிறது. 

அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.45 குறைந்து ரூ.34,720-க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,340 ஆக குறைந்துள்ளது. அதாவது, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5  குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்