இந்த ஐடியாவை கொடுத்ததே மோடிதான்! – ஐஸ் மழை பொழிந்த ராஜ்நாத்சிங்!

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (14:53 IST)
ராணுவத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் திட்டம் ஏற்கனவே பிரதமர் மோடியிடம் இருந்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் பெண்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கவும், ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கு உயர் பதவிகளை அளிக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுநாள் வரை இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் உயர் பதவிகளில் பெண்களை நியமிப்பது போன்றவற்றில் இருந்த ஏற்றத்தாழ்வை இந்த உத்தரவு சரிசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை பாராட்டி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்த திட்டத்தை 2018 சுதந்திர தினத்தின் போதே பிரதமர் மோடி முன்மொழிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்