இ.பி.எஸ்-கே இரட்டை இலை சின்னம்..! ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு..!!

Senthil Velan

புதன், 27 மார்ச் 2024 (12:43 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உள்ள தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
 
இதனிடையே அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த  நீதிமன்றம் தடை விதித்தது. அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும்  எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 
 
இந்த வழக்கில் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி மனு கொடுத்தார். 
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. 

ALSO READ: அண்ணாமலை வேட்பு மனு தாக்கல்..! பாஜக - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..! கோவையில் பரபரப்பு..!!
 
இபிஎஸ்-க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்