அஸ்வினை வாழ்த்தினாரா கிண்டல் செய்தாரா? யுவ்ராஜ் சிங் சர்ச்சை டிவீட்!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:55 IST)
அஸ்வின் 400 விக்கெட்களை எடுத்துள்ளதை அடுத்து அவருக்கு இந்திய வீரர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளிலிலேயே முடிந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் அக்ஸர் படேல் கலக்கினர்.

இந்த போட்டியில் அஸ்வின் தனது 400 ஆவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். 77 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக முத்தையா முரளிதரன் 72 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அஷ்வினின் இந்த சாதனைக் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் எல்லாம் பாராட்டி டிவீட் செய்து வருகின்றனர். இது தொடர்பாக டிவீட் செய்த யுவ்ராஜ் சிங் ‘இது போன்ற பிட்ச்களில் ஹர்பஜன் மற்றும் கும்ப்ளே ஆகியோர் பந்து வீசி இருந்தால் இந்நேரம் அவர்கள் 800 முதல்1000 விக்கெட்களை வீழ்த்தியிருப்பார்கள்’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்