சரத்பவாருடன் பாஜக பிரமுகர் சந்திப்பு: சமரச பேச்சுவார்த்தை முயற்சியா?

ஞாயிறு, 24 நவம்பர் 2019 (10:04 IST)
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை பாஜக பிரமுகர் சந்திக்க வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து கூட்டணி அமைக்க இருந்த நிலையில், மிகப்பெரும் அரசியல் திருப்பமாக தேசியவாத காங்கிரஸிலிருந்து ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு பாஜக பக்கம் தாவினார் அஜித்பவார்.

இதனால் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் கட்சி தாவியவர்களை தகுதி நீக்கம் செய்யவும், தனது கூட்டணி கட்சிகளோடு சென்று ஆட்சிக்கு உரிமை கோரவும் சிவசேனா கூட்டணி திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்திக்க பாஜக எம்.பி சச்சய் காக்டே சென்றுள்ளார். சமரச பேச்சுவார்த்தை முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அது சம்பந்தமாக சரத்பவாரை சந்திக்க பாஜக எம்.பி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்