காற்றை தொடர்ந்து தண்ணீரும் மாசு! – டெல்லி மக்கள் அவதி!

சனி, 23 நவம்பர் 2019 (19:50 IST)
டெல்லியில் காற்று மாசுப்பாட்டால் மக்கள் கஷ்டப்பட்டு வரும் சூழலில் தற்போது நீரும் மாசு அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் சமீப மாதங்களாக காற்று மாசுபாடு அதிகரித்திருப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மக்கள் வீதிகளில் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது டெல்லியில் அரசு வழங்கும் குடிநீர் சுகாதாரமற்றது என புகார்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் தர கட்டுப்பாட்டு ஆணையம் டெல்லியின் 11 இடங்களில் குடிநீர் தரத்தை ஆய்வு செய்துள்ளனர். அதில் 10 இடங்களில் குடிநீர் சுகாதாரமற்றதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை மறுக்கும் கெஜ்ரிவால் அரசு மத்திய அரசு திட்டமிட்டு தனது அரசின் மீது இதுப்போன்ற குற்றச்சாட்டுகளை திணிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் டெல்லி முழுவதும் 3 ஆயிரம் இடங்களில் டெல்லி குடிநீர் வாரியமே தர சோதனை செய்ய இருக்கின்றனர்.

நாட்டின் தலைநகரிலேயே குடிக்க நல்ல தண்ணீர் இல்லை என வெளியாகியுள்ள செய்தி மக்கள் பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்