பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்று ஒரு நாள் பாரத் பந்திற்கு அழைப்பு

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:32 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்று ஒரு நாள் பாரத் பந்திற்கு அழைப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டிருப்பதை அடுத்து பெட்ரோல் டீசல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் பாரத் பந்திற்கு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
 
அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கம் மற்றும் ம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆகிய அமைப்புகளும் இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இந்த பந்த் நடத்தப்படுவதாகவும், சரக்கு மற்றும் சேவை வரியை விதிகளை மறு ஆய்வு செய்யக் கோரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் பாரத் பந்த்தில் கலந்துகொண்டிருந்த வணிகர்களின் அமைப்புகள் தெரிவித்துள்ளன 
 
மேலும் வெளிநாட்டு இகாமர்ஸ் நிறுவனங்கள் அத்துமீறலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்க்கு பெரும்பாலான மாநிலங்களில் ஆதரவு இருந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்