ஆரே காலணியில் மரங்கள் வெட்ட உச்ச நீதிமன்றம் தடை!

திங்கள், 7 அக்டோபர் 2019 (12:41 IST)
மும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் மரங்களை வெட்ட தற்காலிக தடை விதித்துள்ளது.

மும்பையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பசுமையான ஆரே காலணி பகுதியில் மரங்களை வெட்ட மகாராஷ்டிர அரசும், மும்பை மெட்ரோ கழகமும் முடிவு செய்தன. இதை எதிர்த்து சமூக ஆர்வலர்களும், மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மரங்கள் வெட்டும் பணி தொடங்கியது. இதை எதிர்த்து மக்கள் போராட தொடங்கியதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 21ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்