ஒன்ப்ளஸ்க்கு போட்டியாக இறங்கிய Motorola Edge 50 Pro 5G! – சிறப்பம்சங்கள், விலை நிலவரம்!

Prasanth Karthick

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (12:54 IST)
இந்த மாதத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வரும் நிலையில் மோட்டோ நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள Motorola Edge 50 Pro 5G வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.



இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதத்தில் அடுத்தடுத்து பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன.

நேற்று ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் OnePlus Nord CE4 5G விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது வரும் ஏப்ரல் 9ம் தேதியில் மோட்டோரொலா நிறுவனத்தின் புதிய Motorola Edge 50 Pro 5G இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

Motorola Edge 50 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 
 
இந்த Motorola Edge 50 Pro 5G ஸ்மார்ட்போனில் எஃப் எம் ரேடியோ, ஹெட்போன் ஜாக் கிடையாது. யுஎஸ்பி-சி யிலிருந்து ஹெட்போன் ஜாக் கன்வெர்டர் பயன்படுத்தி ஹெட்போனை பயன்படுத்தலாம். அல்லது வயர்லெஸ் ஹெட்போனை பயன்படுத்தலாம்.
இந்த Motorola Edge 50 Pro 5G ஸ்மார்ட்போன் Black Beauty, Luxe Lavender, Moonlight Pearl ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.31,999 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.35,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த Motorola Edge 50 Pro 5G ஸ்மார்ட்போன் ஏப்ரல் 9 முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் அதிகாரப்பூர்வ விற்பனையை தொடங்க உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்