லுக்கே அள்ளுதே.. ஓட்டுனா எப்படி இருக்கும்!? – Honda CB 350 அறிமுகம்!

சனி, 16 டிசம்பர் 2023 (13:17 IST)
கோவையில் பிரபலமான சூர்யபாலா மோட்டார்ஸின் பிக்விங் ஷோரூமில் ஹோண்டா சிபி 350 என்ற பதிய இரண்டு சக்கர வாகனத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது.


 
இதுகுறித்து சூரிய பாலா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருப்பதி மூர்த்தி கூறியதாவது:

இந்த ஹோண்டா சிபி 350 பைக் ஆனது ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் வித் ஃபயர் ரிங் டைப் எல்இடி விங்கர்ஸ் கொண்டது.

முன்பக்க சஸ்பென்ஷன் கவர் மற்றும் லாங் மப்ளர் உடன் கூடியது. ரோபுஸ்ட் டேங்க் அஸ்தடிக், பவர்ஃபுல் 350 சிசி இன்ஜினுடன், அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் உள்ளது.

இரண்டு பேர் பயனிக்க தனித்தனியான நீளமான மற்றும் அகலமான இருக்கைகள் கொண்டது.

சிங்கில் மற்றும் இரண்டு சீட் கொண்டது. பாதுகாப்பான பயனத்திற்கு ஹோண்டா செலக்ட்டபுள் டார்க் கண்ட்ரோல், ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஆஃப் சுவிட்ச், சைடு ஸ்டாண்ட் வித் இன்ஜின் இன்ஹிபிட்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிக தூர வெளிச்சம் தரும் முன்பக்க விளக்கு, முழங்காலுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் இன்ஜின் கார்டு, பின்பக்க கேரியர், மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஹோண்டா நிறுவனத்தின் என்னற்ற உதிரி பாகங்கள் கிடைக்கின்றது.

இந்த வாகனத்தை உடனடி டெலிவரி மற்றும் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியுடன் உள்ளது.

இந்த வாகனமானது டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ ஆகிய இரண்டு மாடல்களில் மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக், பேர்லர் இக்னியஸ் பிளாக், மேட் கிரஸ்ட் மெட்டாலிக், பிரிசியஸ் ரெட் மெட்டாலிக், மேட்டூன் பிரவுன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது.

மேலும் சூர்யபாலா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டமாக கௌசிகா நீர்கரங்கள் அமைப்புடன் இணைந்து இன்று முதல் எங்கள் பிக்விங் ஷோரூமில் எந்த ஒரு வாகனம் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு இலவச மரக்கன்று வழங்கப்படும்.

இதன் மூலம் வருங்கால பசுமை உலகை உருவாக்கிட ஒன்றினைவோம். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்