வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

Senthil Velan

வியாழன், 21 மார்ச் 2024 (17:09 IST)
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற பிரமோற்சவ தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர்சுவாமி கோவில் உள்ளது. 
 
நவகிரகங்களில் செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னிதியிலும், அருள்பாளிக்கின்றனர். இக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் 7ம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 

முன்னதாக விநாயகர்,சுவாமி -அம்பாள், செல்வமுத்துக குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு  சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பஞ்ச மூர்த்திசுவாமிகள் எழுந்தருள சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை இழுத்தனர். தொடர்ந்து நான்கு தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு வீதிகளின் வழியாக சென்று மாலை கோயில் நிலையை அடைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்