ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத குருவார பிரதோஷ நிகழ்ச்சி

வியாழன், 26 அக்டோபர் 2023 (21:25 IST)
கரூர் அருள்மிகு க்மிகவும் சிறப்பாக நடைபெற்றது – வளர்பிறை பிரதோஷத்தில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு.
 
தமிழக அளவில் மட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்து வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வியாழக்கிழமையான இன்று குருவார பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சியில், சிவ பெருமானுக்கு முன்னர் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், கரும்புசாறு, திருமஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகமும், அதனை தொடர்ந்து வெள்ளிக்கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் நந்தி எம்பெருமான் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, நாக ஆரத்திகளை தொடர்ந்து கற்பூர ஆரத்திகளும், மஹா தீபாராதனைகளும் காட்டப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்