Fact Check: வாட்ஸ் ஆப் ரெட் டிக்... அரசு எச்சரிக்கையா? வெறும் வதந்தியா?

வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:38 IST)
அரசு போலி தகவல் பரவுதலை தடுக்க வாட்ஸ் ஆப் கணக்கை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. உலக சுகாதார அமைப்பும்,. மத்திய, மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை மக்களுக்காக வெளியிட்டு வருகிறது.
 
ஆனாலும் சமூக வலைதளங்களில் வெளியாகும் போலியான செய்திகள் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வதந்திகள் பரவாமல் தடுக்க வாட்ஸப்பில் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டது. 
 
அதன்படி அதிகம் பகிரப்பட்ட செய்திகள் ஒரே முறையில் 5 பேருக்கு அனுப்பும் வசதி குறைக்கப்பட்டு ஒருவருக்கு மட்டுமே பகிரமுடியும் என மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் போலியான தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் அரசும் போலி தகவல் பரவுதலை தடுக்க வாட்ஸ் ஆப் கணக்கை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி உங்கள் குறுந்தகவல்கள் கண்காணிப்பட்டால் மூன்று புளூ டிக்குகளும், இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு ரெட் நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என தகவல் வெளியாகி வருகின்ன. 
 
இதற்கு முன்னரும் இதே போல வசந்தி பரவியது, இம்முறையும் இது வசந்தி மட்டுமே என அரசு தரப்பில் (PIB - Press Information Bureau)  தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்