மத்திய அரசுக்கு முன்பே ஊரடங்கை நீட்டித்த பஞ்சாப்: பரபரப்பு தகவல்

புதன், 8 ஏப்ரல் 2020 (16:59 IST)
மத்திய அரசுக்கு முன்பே ஊரடங்கை நீட்டித்த பஞ்சாப்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை அதிகப்படுத்தி கொண்டிருந்தது. இதனை அடுத்து கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது
 
இதனை அடுத்து இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடஞ்கு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை மத்திய அரசு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் இன்று அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்த பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்து விட்டு அதன் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே இரண்டு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. முதலாவதாக பஞ்சாப் மாநிலம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் கோவா மாநிலம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து மற்ற மாநிலங்களும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்