SSLC பாஸ் பண்ணியிருந்தா போதும்.. சென்னை விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! – உடனே அப்ளை பண்ணுங்க!

Prasanth Karthick

புதன், 24 ஏப்ரல் 2024 (11:27 IST)
சென்னை விமான நிலையத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான 422 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு பொருட்களை கையாளும் பணிகளை AIASL மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ் ரேம்ப் வண்டிகளை இயக்கும் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரேம்ப் டிரைவர் வேலைக்கு 130 இடங்களும், உதவியாளர் பணிக்கு 292 இடங்களும் காலியாக உள்ளன.

ரேம்ப் டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பது அவசியம். உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

Utility agent cum Ramp Driver பணிக்கு மாதம் ரூ.24,960, உதவியாளர் பணிக்கு ரூ.22,530 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கான தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள அறிவிப்பு லிங்கில் உள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அதை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன், ரூ.500க்கான டிடி எடுக்க வேண்டும். பின்னர் சென்னையில் உள்ள HRD Department அலுவலகத்தில் நடக்கும் நேர்க்காணலில் விண்ணப்ப படிவத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரைவருக்கான நேர்க்காணல் மே 2ம் தேதியும், உதவியாளருக்கான நேர்க்காணல் மே 4ம் தேதியும் நடைபெற உள்ளது.

விரிவான அறிவிப்பினை காண இங்கே கிளிக் செய்யவும்.

https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH 
 
Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்