சத்தியபாமா சிறந்த வேலை வாய்ப்பு முகாம் 2023! – பணி வாய்ப்பு பெற்ற இளைஞர்கள்!

புதன், 10 மே 2023 (15:00 IST)
சத்தியபாமா சிறந்த வேலை வாய்ப்பு 2023 முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் விழாவிற்கு தலைமையேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள்.

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்கள் 91.18% விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பணி அமர்த்தப்பட உள்ளனர். இதுவரை மொத்தமாக 2823 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளது. இந்த வேலை வாய்ப்பில் தேர்வானவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர், அதேபோல் ஆண்டுக்கு 27 லட்சம் ஊதியத்தில் 14 பேர் மற்றும் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானமாக 120 பேரும், குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 5.2 லட்சமாக தேர்வாகியுள்ளார்.



வேலைவாய்ப்பு வளாகத்தேர்வுக்கான முக்கிய அம்சங்கள்:

1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு 53 இலட்சம்

2. சராசரி ஆண்டு ஊதியம் 5 இலட்சம்

3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள்
வழங்கப்பட்டன.

4. சத்யபாமாவின் நிகர்நிலை பல்கலைகழகம் HCL, Capgemini, TCS, Mindtree, PWC ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 300
மாணவர்களுக்கு பணி வழங்கியிருக்கிறது.

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகம் சார்பில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து, கன்னடா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் மேற்படிப்பை தொடங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்