பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை !!

வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:48 IST)
நாம் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. பொதுவாக தீபாவளியை தீபங்களின் திருவிழா என்று அழைப்பர். தீபாவளி ஐந்து நாள் விழாவாக சொல்லப்பட்டு இருக்கிறது. 

முதல் நாள் தனத்ரயோதசி - தனலக்ஷ்மியை வணங்கும் நாள், இரண்டாம் நாள் நரக சதுர்தசி, சிறிய தீபாவளி - நரகாசுரனை வதம் செய்த நாள், மூன்றாம் நாள் தீபாவளி நாள் - லக்ஷ்மி பூஜை, நான்காம் நாள் கார்த்திக சுத்த பத்யாமி. வாமணரால் பாதாளதிற்கு அழுத்தப்பட்ட அரசன் பாலி, வருடம் ஒரு முறை பூமிக்கு வரும் நாள். இதே நாள் பத்வா - கணவன் மனைவி இடையே உள்ள அன்பையும் பற்றையும் கொண்டாடும் நாள், ஐந்தாம் நாள் பாய் துஜ் - சகோதர சகோதரி அன்பை  கொண்டாடும் நாள்.
 
மேலே கூறிய காரணங்கள் மட்டும் இன்றி, ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணனோடு அயோத்திக்கு திரும்பி வந்த நாள் என்று சொல்லப் படுகிறது. பாண்டவர்கள்  பதிமூன்று வருடங்கள் முடிந்து திரும்பிய நாள் என்றும் நம்பப்படுகிறது. பாற்கடலை கடைந்த போது லக்ஷ்மி பிறந்த நாளை தீபாவளியின் ஆரம்ப நாளாகவும்  சொல்லப்படுகிறது.
 
உத்திரப்பிரதேசத்தில்  ராவணனை, ராமர் வெற்றி கண்டு அயோத்தி திரும்பியதற்காக கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவை பொறுத்தமட்டில் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுகிறது.
 
கர்நாடகத்தில் நரகாசுரனை சத்யபாமா வதம் செய்ததற்காகவும், பாலி சக்ரவர்த்தியை வீட்டிற்க்கு அழைப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இன்னும் நிறைய காரணங்கள் தீபாவளிக்காக சொல்லப்படுகிறது. ஐந்து நாள், ஐந்து காரணங்களுகாக வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி தென்மாநிலங்களில் நரகாசுரனை  கொன்றதற்காக மட்டும் கொண்டாடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்