தலை தீபாவளி பண்டிகையும் புதுமணத் தம்பதியரும்....

ஏ.சினோஜ்கியான்

வியாழன், 5 நவம்பர் 2020 (22:35 IST)
இந்திய மக்களின் பாரம்பரியப் பண்டிகையில் முக்கியமானது இந்த தீபாவளி. அனைத்து மக்களும் தம் பெற்றோர் உற்றார் உறவினர்களுடன் இணைந்து இந்த பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவர்.

புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர்  மாமனார்)வீட்டுக்குச் செல்லுவது வழக்கம்., அங்கு மனைவியின் வீட்டார் விதவிதமான விருந்து வைத்து மாப்பிள்ளையைக் கவனிப்பார்கள். எண்ணெய்க் குளியல் முடித்துக் காலை சிற்றுண்டி, மதியம் பெரும் விருந்து, பின்னர் கைப்பக்குவமாகச் சமைத்த விதவிதமான பலகாரம் உள்ளிட்டவைகளைச் சாப்பிட வைத்து திக்குமுக்காட வைப்பார்கள்.

இந்தப் பண்டிகை காலத்தை அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் உறவுகள் சூழந்திருக்கும்போதும் ஏற்படும் என்றன் இந்தப் பண்டிகையின்போது சாத்தியம். ஆனால் விருந்து முடிந்ததும் அன்றே வீட்டிற்குக் கிளம்பிவிடுதலே மாப்பிள்ளைக்கு நல்லது....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்