பேமிலி மேன் இரண்டாம் பாகத்தில் சமந்தா! ஓடிடியில் அறிமுகம்!

செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:49 IST)
நடிகை சமந்தா வெற்றிபெற்ற பேமிலி மேன் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளது பற்றி பேசியுள்ளார்.

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி மற்றும் சந்தீப் கிஷான் உள்ளிட்ட பலர் நடித்த சீரிஸ் பேமிலி மேன். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளார். இது சமந்தா முதன் முதலாக ஓடிடிக்காக நடிக்கும் தொடராகும்.

இதுபற்றி பேசியுள்ள சமந்தா ‘ஒடிடி தளங்கள் நடிகர்களுக்கு பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓடிடி எங்களுக்கு வழங்குகிறது. என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த தொடர் ஆச்சரியமாக இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்