கிரிக்கெட் தரவரிசயில் கீழே தள்ளப்பட்ட கோலி! – ஸ்மித் முன்னேற்றம்!

செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:57 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டெஸ்ட் மேச்ட்களில் அதிக ரன் அடித்ததன் மூலம் இந்திய கேப்டன் விரட கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஸ்திரேலியாவில் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சிட்னி ஆட்டம் நேற்றுடன் நடந்து முடிந்த நிலையில் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 131 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களும் எடுத்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசை பேட்ஸ்மேன் பட்டியலில் முதல் இடத்தில் கேன் வில்லியம்சனும், இரண்டாம் இடத்தில் விராட் கோலியும் இருந்தனர். இந்நிலையில் தற்போது டெஸ்ட் ஆட்டத்தில் கோலி விளையாடததால் அதிக ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித், தரவரிசையில் விராட் கோலியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்