கேப்டன் செய்ற வேலையா இது.. வெட்கமாயில்ல? – ஸ்டீவ் ஸ்மித்தை புரட்டி எடுக்கும் ரசிகர்கள்!

திங்கள், 11 ஜனவரி 2021 (15:37 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சிட்னி டெஸ்ட்டை இந்தியா ட்ரா செய்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் செய்த செயல் ஒன்று கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து முடிந்துள்ளது. பரபரப்பான ஆட்டத்தில் நின்று விளையாடிய அஸ்வின் – விஹாரி கூட்டணி விக்கெட் இழக்காமல் தொடர்ந்து ஆட்டத்தை இழுத்து சென்று ட்ரா ஆக்கினர். முன்னதாக விளையாடிய ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடிய போதிலும் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அவர் அவுட் ஆகவில்லை என்றால் இந்தியா வென்றிருக்கும் என்றும் சிலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது அவர் பேட்டிங் லைனில் குறித்த கார்ட்டை ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் அழிக்கும் காட்சிகள் ஸ்டம்பில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் ரன் ஓடிவிட்டு வந்த பண்ட் சூதானமாக அம்பயரிடம் கேட்டு தனது பழைய கார்ட்டை கரெக்டாக குறித்து கொண்டார். ஸ்மித்தின் இந்த செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள், சேவாக் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் பந்தை தேய்த்து இதுபோன்ற மோசடியை செய்து ரசிகர்களிடையே திட்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Tried all tricks including Steve Smith trying to remove Pant's batting guard marks from the crease. Par kuch kaam na aaya. Khaaya peeya kuch nahi, glass toda barana.
But I am so so proud of the effort of the Indian team today. Seena chonda ho gaya yaar. pic.twitter.com/IfttxRXHeM

— Virender Sehwag (@virendersehwag) January 11, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்