ஆஸ்திரேலிய தொடரைக் கைப்பற்றுவதே தந்தைக்கு அஞ்சலி – முகமது சிராஜ் நெகிழ்ச்சி!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:40 IST)
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முகமது சிராஜ் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாத சூழலில் உள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்காக ஆஸ்திரேலியா சென்று பயிற்சி பெற்றுவரும் நிலையில் இந்தியாவில் அவரது முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்சனைக் காரணமாக மரணமடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பயோ பபுளில் சிராஜ் இருக்கும் நிலையில் அவரை இந்தியா அனுப்ப கிரிக்கெட் வாரியம் தயாராக இருந்தும் முகமது சிராஜ்  அங்கேயே இருக்க முடிவு செய்தார்.

இந்நிலையில் முகமது சிராஜின் சகோதரர் இஸ்மாயில் சிராஜ் ஆஸ்திரேலிய தொடரை சிறப்பாக விளையாடி கைப்பற்றி அந்த வெற்றியை தந்தைக்கு அஞ்சலியாக்குவேன் எனக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்