என்னை ஸ்லெட்ஜிங் செய்தால் என் பதில் இப்படிதான் இருக்கும் – டேவிட் வார்னர் பதில்!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:33 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்திய ஆஸ்திரேலிய தொடர் பற்றி பேசியுள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. முதலில் நடக்க இருக்கும் ஒருநாள் மற்றும் டி 20 தொடர் பற்றி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஸ்லெட்ஜிங் பற்றி பேசியுள்ளார்.

அவர் ‘எனக்கு சமீபத்தில்தான் 34 ஆவது பிறந்தநாள் வந்தது. அதனால் சர்வதேசக் கிரிக்கெட்டில் என்னுடைய நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் வாக்குவாதத்தின் மூலம் என்னை ஸ்லெட்ஜிங் செய்யும் வீரர்களிடம் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். என்னை சீண்டுபவர்களுக்கு எதிராக வாக்குவாதம் செய்யாமல் எனது பேட் மூலம் பதில் கொடுக்க முயற்சி செய்வேன்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்