2022 ஆம் ஆண்டு வெளியான அழகிய காதல் திரைப்படம் ஹே சினாமிகா. மதன் கார்க்கி எழுதிய இப்படத்தை பிருந்தா இயக்கியிருந்தார். துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். முதல் சந்திப்பிலேயே துல்கர் சல்மான், அதிதி ராவ், காதலில் விழுந்து திருமணம் செய்துகொள்கின்றனர். 2 ஆண்டு இல்லற வாழ்வுக்கு பின் சலிப்படைந்த அதிதி கணவனை பிரிய காரணம் தேடி காஜல் அகர்வாலை பொய்யாக காதலிக்க சொல்லி உதவிகேட்கிறார். அவர்களுக்குள்,நல்ல உறவு செல்கிறது பின்னர் அதை பார்த்து பொறாமைப்பட்டு மீண்டும் தன் கணவனை அடைய அதிதி முயற்சிக்கிறார். துல்கர் அவரை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதே கதை. நல்ல கதை, சிறப்பான நடிப்பு இருந்தும் படம் பிளாப் ஆனது தான் வருத்தம்.