உக்ரைனுக்கு 3 பில்லியன் நிதியுதவி! – உலக வங்கி அறிவிப்பு!
புதன், 2 மார்ச் 2022 (14:20 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் உலக நாடுகள் பல உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவி செய்வதாக அறிவித்துள்ளன. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா மெல்ல மெல்ல தாக்கி அபகரித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு நிதியுதவி செய்ய உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. 3 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ள உலக வங்கி முதற்கட்டமாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக 200 மில்லியன் டாலரை விடுவிப்பதாக தெரிவித்துள்ளது.