அமெரிக்க விமானத்தை நடுவானில் வழிமறித்த சீன விமானங்கள்!!

வெள்ளி, 19 மே 2017 (15:31 IST)
அமெரிக்காவின் விமானத்தை சீன விமானம் நடிவானில் வழிமறித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


 
 
வான்பரப்பில் உள்ள கதிர்வீச்சை கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவின் WC-135 விமானம் ஈடிபட்டு கொண்டிருந்தது.
 
அப்போது, வானில் பறந்து கொண்டி அமெரிக்க விமானத்தை, சீனாவின் இரண்டு SU-30 ஜெட் விமானங்கள் இடைமறித்துள்ளன.
 
அமெரிக்க விமானம் மேல் நோக்கி பறந்த போது, இரண்டு ஜெட் விமானங்களும் இடையில் குறுக்கிட்டு இடையூறு ஏற்படுத்தியுள்ளன.
 
இதனால், முறையற்று நடந்துகொண்ட சீனாவின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்