ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 8 வது நாளாகப் போர் நடந்து வருகிறது. இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் சமீபத்தில் பேசியதில் ரஷ்ய படைகள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்தினாலும் அவர்களால் ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. உக்ரைன் மக்கள் ராணுவத்தோடு இணைந்து ரஷ்ய வீரர்களுக்கு எதிராக போரிடுகிறார்கள். மக்களின் வீரத்தைப் பார்த்து பல இடங்களில் ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாக செய்திகள் வருகின்றன. சில பகுதிகளில், ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களிடம் மக்கள் ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்டதற்கு எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். எனக் கூறியுள்ளார்.