இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடந்து வந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல் நடத்தியது. இதனால், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் வாக்கி டாக்கி, பேஜர் வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த போரை நிறுத்துவதற்காக முயற்சி எடுத்த நிலையில், தற்போது ஒப்பந்தம் ஏற்பட்டததாகவும் நாளை முதல் போர் முடிவுக்கு வருகிறது என்றும், இரு நாடுகள் இடையேயான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த துணிச்சலான முடிவை லெபனான், இஸ்ரேல் தலைவர்கள் எடுத்ததற்கு பாராட்டுகிறேன் என்றும், இது அமைதிக்கு சாத்தியம் என்பதை காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் லெபனான் எல்லையில் அமெரிக்கா ஆயுத குழுக்கள் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.