டிரம்பை சந்திக்க வடகொரியா அதிபர் விருப்பம்!

வியாழன், 29 மார்ச் 2018 (12:00 IST)
வடகொரிய அதிபரை சந்திக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவலாக உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
வடகொரியா அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் தள்ளியது. வடகொரியாவின் செயலால் மூன்றாம் உலகக் போர் ஏற்படும் என்று அச்சத்தில் இருந்தனர். அமெரிக்கா சார்ப்பில் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் வடகொரியா பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற போக்கில் நடந்து கொண்டிருந்தது. அதனால் அமெரிக்க அரசு  வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தது. இதனையடுத்து தென்கொரியா தூது குழு மற்றும் சின அதிபரின் அறிவுரையால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் டிரம்ப் வடகொரிய அதிபரை சந்திப்பது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கிம் ஜாங் உன்னை சந்திக்க மிகவும் ஆவலுடன் உள்ளதாகவும், மேலும், வடகொரியா மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்