இதையடுத்து, கோத்தபய நாட்டை விட்டு தப்பியோடினார். அவரது சகோடர்களான, மஹிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே இருவரும் வரும் ஜூலை 28 வரை நாட்டை விட்டு செல்ல உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்தத் தடை ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய அதிபராக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே ,கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை எனவும் அவர் திரும்பி வந்தால் நாட்டில் பதற்ற நிலை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.