கடந்த 2017ம் ஆண்டில் சின்சிணாட்டி உனவகத்துக்குச் சென்ற இஜ்மிர் கோச் , உணவு சாப்பிட்டு விட்டு, வெளியே வரும் போது, வெளியி நின்றிருந்த ஒருவரை பார்த்து, அவரை யூதர் என்று நினைத்து பலமாகத் தாக்கியுள்ளார். மேலும் அனைத்து யூதர்களையும் கொல்லப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் கோச் கொலை வெறியோடு தாக்கிய நபர் உண்மையில் யூதர் இல்லை.
பின்னர், இதுகுறித்து, கோச் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அமெரிக்க நாட்டின் வெறுப்புணர்வு குற்றங்களுக்காக சட்ட விதிகளை மீறி செயல்பட்டதற்காக கோச்சுக்கு 30 மாதங்கள் சிறைதண்டனை அளித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.