இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை நடந்த விவாதத்தில் பேசிய இந்தியாவின் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா, பாலஸ்தீன வளர்ச்சியில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியா உதவி செய்து வருகிறது என்றும் இதுவரை 120 மில்லியன் டாலர் அளவில் உதவிகளை செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை வலுவாகக் கண்டித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த அவர், இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.