இலங்கை முழுவதும் திடீரென முழு ஊரடங்கு அமல்! – இலங்கையில் கடும் பதட்டம்!
திங்கள், 9 மே 2022 (15:40 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தவர்களுக்கும், ராஜபக்ஷே ஆதரவாளர்களும் மோதல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கொழும்பு மற்றும் மேற்கு மாகாணங்களில் ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் எழுந்துள்ளது. ராஜபக்ஷே ஆதரவாளர்கள் சென்ற பேருந்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
அதை தொடர்ந்து நாடு முழுவதும் இரு தரப்புக்கும் சண்டை மூள தொடங்கியுள்ளதால் இலங்கை முழுவதும் அவசர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.