இலங்கையில் ஒரு கிலோ ஆப்பிளின் விலை இவ்வளவா? பீதியைக் கிளப்பும் புகைப்படம்!
சனி, 23 ஜூலை 2022 (15:17 IST)
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி மோசமான நிலையில் உள்ளது.
இலங்கையில் கடந்த சில வாரங்களாக மக்களின் பெரும் போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பிச் சென்று விட்டார் என்பதும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து இப்போது ரனில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார்.
ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வர இன்னும் பல மாதங்கள் என தெரிகிறது. இதனால் இலங்கையில் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. பெட்ரோல், டீசல், அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றில் ஆப்பிள் ஒரு கிலோ 2050 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.