தண்ணீர், மின்சார கட்டணம் செலுத்த போராட்டம்: சவுதி இளவரசர்கள் கைது!

ஞாயிறு, 7 ஜனவரி 2018 (15:46 IST)
அரச குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை கட்ட வேண்டும் என சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அரச அரண்மனையில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
எண்ணெய் சார்ந்த நிலையை குறைக்க வேண்டும் என்பதற்காக சவுதி அரசு பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. உள்ளூர் பெட்ரோல் விலையை சவுதி அரேபியா இரட்டிப்பாக உயர்த்திருந்தது. அத்துடன் உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5% வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், சவுதி அரச குடும்பத்திற்கு கட்டணங்கள் கட்ட வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இளவரசர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது அமைதி மற்றும் ஒழுங்கிற்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் பெயரில், இளவரசர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 
சவுதியில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில், இளவரசர்களும், அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்