அரேபிய நாடுகளில் பெண்களுக்கான சட்டம் கடுமையாக இருந்து வந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவ்விதிகள் தளர்த்தப்பட்டு வருகிறது. சவூதி அரேபியாவில் 2015ஆம் ஆண்டில் பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டது.
சமீபத்தில் நாட்டின் முக்கிய மைதானத்தில் அரங்கத்தில் பெண்கள் அமர அனுமதிக்கப்பட்டனர். 1990ஆம் ஆண்டு முதல் பெண்கள் கார் ஓட்டும் உரிமையை வழங்க பெண்ணுரிமைக் கோருவோர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மத குருக்கள், சமூகத்திற்கு கெடுதல் செய்து பாவத்திற்கு வழிவிடும் என்று மத அடிப்படையில் கருதி அனுமதி வழங்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் மன்னர் சல்மான், பெண்களும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்ட அறிவிப்பை அமெரிக்கா போன்ற நாடுகள் வரவேற்றுள்ளனர். மேலும் இந்த பெண்கள் கார் ஓட்டும் உரிமை வரும் கோடை காலம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.