104 ரூபாயும், ஒரு மது பாட்டிலும் கொடுத்துவிட்டு எனது மகளை பலாத்காரம் செய்துகொள்: கொடூர தாய்!

சனி, 10 செப்டம்பர் 2016 (08:54 IST)
ரஷ்யாவின், கபரோவ்ஸ் பகுதியில் ஒரு தாய் 104 ரூபய்க்கும், ஒரு மது பாட்டிலுக்கும் தனது 10 வயது மகளை ஒரு பலாத்காரனுக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் காலில் அடிபட்டு அழுது கொண்டிருப்பதை அவ்வழியே வந்த ஒருவர் பார்த்து காவல்துறைக்கும், அவசர சிகிச்சைக்கும் தகவல் அளித்தார். சிறுமிக்கு சிகிச்சை அளித்து சோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
 
பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தன்னை தனது தாயே ஒரு நபரிடம் பலாத்காரம் செய்ய விற்றதாகவும், அந்த நபர் ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவர் எனவும் கூறினார்.
 
சிறிது பணமும் ஒரு மது பாட்டிலும் கொடுத்துவிட்டு எனது மகளை என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என அந்த சிறுமியின் தாய் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கொடூரம் ஒரு மது பாட்டிலும், 104 ரூபாயும் அளித்துவிட்ட அந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
 
பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய அற்ப ஆசைகளுக்காக விற்பனை செய்த தாய் தலைமைறைவாக உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்