உக்ரைன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ரஷியா திட்டம்

வெள்ளி, 3 மார்ச் 2023 (22:22 IST)

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து  1 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில்,  உக்ரைன் மீது தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்த புதின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் நாட்டின் மீது புதின் உத்தரவுப்படி ரஷிய ராணுவம் போரிட்டது.
 
இதற்கு ஆரம்பத்தில் உக்ரைன்  நாடு பதறினாலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்பத்திய நாடுகள் ரஷியாவை கண்டித்து, உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளிக்க முன்வந்தன.
 
எனவே, இப்போரியில் வல்லரசு நாடான ரஷியாவை எதிர்த்து, ஓராண்டாக வலிமையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.
 
இதுவரை இரு நாட்டு தரப்பிலும், பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷியாவிடமிருந்து அதை மீட்கவும் உக்ரைன் போராடி வருகிறது.
 
இந்த நிலையில், உக்ரைனில் மிகப்பெரியளவில் தற்கொலைப் படைத்தாக்குதலை  ரஷியா நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதற்கான உத்தரவை அதிபர் புதின் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்