உக்ரைன் நாட்டின் மீது உலகப் பெரும் வல்லரசான ரஷியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. ஏழரை மாதத்திற்கு மேலாக இப்போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில், உக்ரைனில் சில பகுதிகளை தங்கள் பிராந்தியத்துடன் ரஷ்யா இணைத்துக்கொண்டது.
இதற்கு ஐ நா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கான தீர்மானம் ஒன்று ஐ நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைன் தலை நகர் கிவ்வில் கடந்த 10 ஆம் தேதி ரஷிய ராணுவம் ஒரு நாளில் சுமார் 84 ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், அப்பாவி மக்களும் பலியாகினர்.
இதற்குப் பதிலடியாக ரஷியாவிடம் உள்ளா கிரீபியா என்ற பகுதியில் உள்ள பாலத்தின் குண்டுவெடிப்பு நிகழ்த்தியது. இதனால், இன்று ரஷியா, உக்ரைனில் கிவ் நகர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக, உக்ரைன் –ரஷிய எல்லைப் பகுதியில் பெல் கோரட் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷியாவின் வெடி மருந்து கிடங்கு இருந்த நிலையில், அதன் மீது உக்ரைன் படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ஆயுதக் கிடங்கு சேதமடைந்துள்ளது.