இங்கிலாந்தின் மிக இளம் பிரதமரும் ரிஷ் சுனக்கே ஆவார். இதனால் அடுத்து ரிஷி சுனக் என்ன செய்ய போகிறார் என அவரது செயல்பாடுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பதவியேற்பு உரையில் பேசிய ரிஷி சுனக் “நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டுள்ளேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்லாமல், செயலால் ஒன்றிணைப்பேன்” என பேசியுள்ளார்.
பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ரிஷி சுனக். உக்ரைனில் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர், உக்ரைனுக்கு இங்கிலாந்தின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.