இங்கிலாந்தை ஆளப் போகும் இந்தியர் ! யார் இந்த ரிஷி சுனக்- ஒரு பார்வை!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (23:34 IST)
உலகையே கட்டியாண்ட பேரரசுகள் ரோமப் பேரரசு, பிரிட்டன் பேரரசு, இந்தப் பேரரசுகளில் நவீன காலம் வரை  இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் இங்கிலாந்துதான் தன் காலணி நாடுகளாக ஆண்டது. தற்போதும் ஆஸ்திரரியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அசைவுகளுக்குக் காத்திருக்கிறது.

ஆனால், இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு  பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அந்த நள்ளிரவில்,  காந்தி, நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்களே கூட நினைத்திருக்க மாட்டார்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தங்கள் ஆண்ட நாடான கிரேட் பிரிட்டனை ஆளப்போகிறார்கள் என்று.

ஆனால், 75 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிகழ்வு  நடந்துள்ளது, பஞ்சாப்  மா காணத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ரிஷி சுனக்கின் முதாதையர்கள். முதலில், ஆப்பிரிக்க நாட்டிற்குக் குடிபெயர்ந்த அவர்கள் அங்கிருந்து, சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்,  இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தது.

ரஷியின் தந்தை ஒரு மருத்துவராகப் பணியாற்றி வந்த போது, அவரது தாய் மருந்துக் கடையை நடத்திவந்தார். அங்குள்ளா சவுத்தாம்ப்டன் நகரில் ரிஷி பிறந்தார்.

அதன்பின்னர், பெருமைமிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றவர், அடுத்து, அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்திருக்கிறார். அங்கு படித்தபோதுதான் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவைப் பார்த்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கவே இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், 2009 ஆம் ஆண்டு பெங்களூரில் இருவரும்  திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியர்க்கு அனோஷ்கா, கிருஷ்ணா என்ற ஒரு பிள்ளைகள் உள்ளனர்.

அரசியலில் ஆர்வம் கொண்ட ரிஷி,  கடந்த 2014 ஆம் ஆண்டு , கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், யார்க்சையர் ரிச்மண்டு  நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, எம்பியானார். அதன்பின், நிதியமைச்சராகப் பணியாற்றியுள்ளவர், தற்போது இங்கிலாந்தின் பிரதமராகியுள்ளார்.

லிஸ் டிரஸின் பொருளாதாரக் குளறுபடிகளினால் இங்கிலாந்தே  நெருக்கடியில் உள்ள நிலையில், இதைச் சமாளித்து, பொருளாதாரரத்தை மீட்பதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கூறியுள்ளார் ரிஷி. அவர் மீது உலகத் தலைவர்களின் கவனம் கூடியுள்ள நிலையில்  அந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு சி.இ.ஓ ஆக இருப்பதுபோல், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுபோல்,  நம்மை ஆண்ட நாட்டில் இந்திய வம்சாவளி ஒருவர் ஆளப்போவது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினோஜ்

Edit by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்