அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்! கானாவில் பரபரப்பு
திங்கள், 7 நவம்பர் 2022 (22:35 IST)
மேற்கு ஆப்பிரிக்க நாடானா கானாவில் அதிபர் நானா அகுஃப்போ அட்டோ பதவி விலக வலியுறுத்த்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இலங்கையைப் போல் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதமே அங்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டியது. இதனால், ஏழை எளிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மக்கள், அந்த நாட்டு அரசு மற்றும் அதிபர் நானா அகுஃபோ அட்டோ பதவி விலக வலியுறுத்தி இன்று சாலையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.