குழந்தைகளை ஆபாச படம் எடுத்த நபருக்கு 7 ஆண்டு சிறை

சனி, 28 ஏப்ரல் 2018 (13:00 IST)
பாகிஸ்தானை சேர்ந்த அமீன் எனற நபர் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
 
பாகிஸ்தானை சேர்ந்தவர் அமீன். இவர் குழந்தைகளை மையமாக வைத்து ஆபாச படம் எடுத்து அதை ஐரோப்பா நாடுகளில் பரப்பியதாக நார்வே தூதரகம் அவர்மீது புகார் அளித்தது.
 
அந்த புகாரின் அடிப்படையில் அமீன் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் 6 லட்சம் ஆபாச வீடியோக்கள் இருந்தது. பின்னர் அவரது வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் அமீன் மீதான குற்றசாட்டி நிரூபிக்கப்பட்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 12 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.
 
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பது கிரிமினல் குற்றம் என சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த சட்டத்தில் சிறைக்கு செல்லும் முதல் நபர் அமீன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்